நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வானிலை ஆய்வுமையம் தகவல்:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!