தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை பெய்யும் காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

தற்போது புதிதாக தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வரும் நவம்பர் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!