தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும், மாணவ செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தீபாவளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையையும் (6.11.2021) சேர்த்து விடுமுறை வழங்கிடுமாறு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
விடுமுறை வேண்டி மனு:
6.11.2021, சனிக்கிழமை அரசு ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை என்பதால், தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் அரசு ஊழியர்கள் 7.11.2021, ஞாயிறு விடுமுறையும் சேர்த்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு 8.11.2021 அன்று மிகுந்த சந்தோஷத்துடன் அலுவலகங்களுக்கு வருவார்கள்.
ஆகவே அனைத்துப் பள்ளிகளுக்கும் 6.11.2021, சனிக்கிழமை அன்றும் விடுமுறை அளித்து, ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும், தீபாவளியை மிகச் சிறப்பாக குடும்பத்துடன் மகிழ்ந்து கொண்டாடிட வழி வகுத்துத்தருமாறு தங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் அப்பிரச்சினையை காலம் தாழ்த்தாமல், உடனடியாக அணுகி, எங்கள் எல்லோருடைய மனங்களும் மகிழும் வண்ணம் 6.11.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று கனிவுடன் வேண்டுகிறோம்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!