டிச.25 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? டிச.17ம் தேதி திருப்புதல் தேர்வு துவக்கம்!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வரும் டிச.17ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிச.25ம் தேதி முதல் விடுமுறை விடப்படலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வு:

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கோபிதாஸ், ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு டிச.17ம் தேதி முதல் துவங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்புக்கு, 17ம் தேதி தமிழ், 18ல் ஆங்கிலம், 20ல் கணிதம், 21ல் விருப்பப்பாடம், 22ல் அறிவியல், 23ல் தொழிற்கல்வி மற்றும் 24ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 17ல் தமிழ், 18ல் ஆங்கிலம், 20ல் இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், 21ல் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 22ல் கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை, 23ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, 24ல் கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது தேர்வு முடிவடைந்த பிறகு டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!