சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம்!!

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம்:

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்று போட்டுக்கொள்ளலாம்.

இந்தநிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்து சிலருக்கு ஊசி போடுவதை பார்வையிட்டார்.

மாநகராட்சி மருத்துவ ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவார்கள். இந்த திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.