வீடு தேடி கல்வி திட்டம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை:

மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க வீடு தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக வீட்டின் அருகில் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!