திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிப்பு:
பள்ளிகளின் நேரம் போக மாலை 5 மணி முதல் 7 மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பயிற்சி அளிக்க நியமிக்கப்படுபவர் குறைந்தது வாரத்துக்கு 6 மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர்கள் illamthedikalvi.tnschool.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவிடலாம் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ் கட்டாயம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் முற்றிலும் மாணவர்களின் நலன் கருதியே தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!