வீடு தேடி வரும் சத்துணவு திட்டம் – அரசின் புதிய முயற்சி!!

தமிழகத்தில் ‘வீடு தேடி வரும் சத்துணவு’ திட்டம் – அரசின் புதிய முயற்சி!

அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவிப்பு: 

தமிழகத்தில் கொரோனா பரவலால் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் மதிய உணவு சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மதிய உணவு திட்டம்:

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களால் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.

சத்துணவு வழங்கல்:

ஏழை மக்கள் அன்றாட உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களின் குழந்தைகளுக்கும் உணவளிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இதனை கவனித்த சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பு சத்துணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

அரசு தரப்பில் இருந்து தெரிவிப்பு:

இந்த வழக்கு விசாரணை குறித்து தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது என்றும் மேலும் இந்த திட்டம் 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!