புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த எளிய வழிமுறைகளை பின் பற்றி எளிமையாக புதிய ரேஷன் கார்டுகளை பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

 • முதலில், https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும்.
 • அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
 • அதன் பிறகு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்க வேண்டும்.
 • அதோடு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.
 • இதன் பிறகு அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களில், எண்ணெய் நிறுவனம் எது என கொடுக்க வேண்டும்.
 • உங்களிடம் ஒரு இணைப்பு மட்டும் உள்ளது எனில் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டு இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.
 • அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும்.
 • உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து கொண்டு, உறுதிப்படுத்த வேண்டும்.

இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இதற்கு 1 – 2 மாதங்கள் ஆகலாம்.