ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? முழு தகவலுடன்!

ஆதார் இணைப்பு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. மேலும், அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியமாகிவிட்டது. வங்கி, வருமான வரி தாக்கல், வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் பயன்பாடு, ரயில் டிக்கெட் என அனைத்திற்கும் சான்றாக ஆதார் கார்டை தான் ஒப்படைக்க வேண்டியாகிவிட்டது. இதனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எந்தவித பிழையும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரி செய்துகொள்ள வேண்டும். மேலும், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

முதலில், எப்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவது என்பதை பார்க்கலாம். ஆதார் திருத்தம் செய்வதற்கான படிவத்தை ஆதார் மையத்தில் வாங்கி அந்த படிவத்தினை பூர்த்தி செய்து ஆதார் நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், சேவை கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். பின்னர், அங்கு Update Request Number (URN) வழங்கப்படும். இதன் மூலமாக விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும், 90 நாட்களுக்குள் புதிய மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டுவிடும். அதே போல தான் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து ஒப்படைத்துவிட்டால் 90 நாட்களுக்குள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்துவிடலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!