மக்களே Aadhar உடன் மொபைல் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்!

ஆதார் அட்டை:

இந்திய நாட்டில் வசிக்கும் மக்களின் தனித்துவமான அடையாளமாக ஆதார் இருந்து வருகிறது. தற்போது இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு இத்தகைய செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பு அறிவித்திருந்தது.

ஆதாரில் மொபைல் எண் மாற்றம் செய்ய அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து அங்குள்ள புதுப்பிப்பு அல்லது திருத்தம் என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு விண்ணப்பத்தை நன்றாக சரிபார்த்தவுடன் ஆதார் நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சேவைக்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் உள்ள ஒரு ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி அளிப்பார். இந்த URN எண்ணை வைத்து உங்களது விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் புதிதாக அளிக்கப்பட்ட மொபைல் எண் 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும். இதே போல் மொபைல் எண்ணை ஆதாரில் இணைக்க அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இப்பொழுது ஆதாருடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை படிவத்தில் இணைத்து ஆதார் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு உங்கள் விவரங்களை பயோ மெட்ரிக் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தி அங்கீகரிப்பார். இந்த சேவைக்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!