11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! உடனே பாருங்க!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் 27ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 மறுகூட்டல் ரிசல்ட்:

 பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மற்றும் தேர்வு எழுதாதவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நிறைவடைந்து நவம்பர் 9 ஆம் தேதி பிளஸ் 1 துணைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவிப்பு:

அந்த தேர்வு விடைத்தாளில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு ரிசல்ட் வர உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. மதிப்பெண் மறுகூட்டல் உள்ள தேர்வர்களின் பதிவெண் அடங்கிய பட்டியல், அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும் மற்றும் பட்டியலில் எண்கள் இல்லாதவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் பதிவிறக்கம் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்ம அறிவிப்பில் கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!