பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, 19.11.2021-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன்,

Notification < SSLC Examination< Provisional Mark Sheet SSLC Result – Sep 2021

எனத் தோன்றும் வாசகத்தினை Click செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

முக்கிய குறிப்பு : 

செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் வேண்டும்.

மறுகூட்டல் (Retotal) கட்டணம் :

பாடம் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205/-