தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேர்முகத்தேர்வு:
குரூப்-2 பணிகளில் அடிப்படை ஊதியத்திற்கு மேல் உள்ள பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பிற பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் குரூப்-2 பணிகள், குரூப்-2-ஏ தேர்வின் கீழ் கொண்டு வரப்படலாம். அதன்படி தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நீக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு பணிகளில் குரூப்-B பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் நேர்முகத்தேர்வை ரத்து செய்ய உள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!