ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!!

அமைச்சர் தகவல்:

நாடு முழுவதும் மக்களின் நலன் கருதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து பொருட்கள்:

அமைச்சர் நாடு முழுவதும் ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி நியாய விலை கடைகள் மற்றும் வெளிச்சந்தைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறினார். அதாவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் சாதாரண அரிசியில் துத்தநாகம், வைட்டமின் பி 12 மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் 2024 க்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!