9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு!!

மதிப்பீட்டுத் தேர்வு:

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கட்டகத்தில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், உயிரிவிலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினிபயன்பாடுகள் ஆகிய பாடங்களில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு:

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் வருகிற அக்.12ம் தேதி முதல் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒருமணிநேரம் கால அவகாசம் அளித்து தேர்வு நடத்த வேண்டும். இதற்கான முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!