விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்!

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது.  இந்த பயிர் காப்பீட்டை செய்து கொள்ள இன்று நவம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 தான் கடைசி நாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இ சேவை மையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கூட பயிர் காப்பீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!