தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசு ஆசிரியர்கள்:
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சொத்து மற்றும் கடன் குறித்த விவர அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் புதிதாக ஏதேனும் சொத்துக்கள் வாங்கும் விவரங்களை தெரிவித்தால் அதை முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!