தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த சுழலில். நம் தமிழக ஆசிரியர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. கடந்த வருடம் முதல் கொரோனா அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்களை தொடர்ந்து ஆசிரியர்களையும் கொரோனா தடுப்பு பணி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை ஆசிரிய சங்கத்தினர் எதிர்த்து வந்தனர். பிறகு ஓய்வு பெறும் நிலையில் உள்ளோர், உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க கோரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது கொரோனா நோய் தொற்றிற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. அதனால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். இணையதள கோவிட்-19 பக்கத்தில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணை, இரண்டாவது தவணை என மொத்தம் எத்தனை தடுப்பூசி போன்ற விவரங்களை ஆசிரியர்கள் பதிவிட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.