புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்

நாடு முழுவதும் வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசு செயலாளர் உதயகுமார் கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தர முடிவு எடுத்துள்ளார்.

அதனால் நியாயவிலைக் கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!