நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருவதால்  போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்த வாய்ப்பில்லை என சென்னை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கொரோன பரவல் அதிகமான நாடுகள்: 
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • டெல்லி
  • கர்நாடகா
பிரதமர் மோடி அறிவிப்பு:

கடந்த வாரம், வரும் மே 1ம் தேதி முதல் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும்  இதற்கு இணையத்தில் 28 தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறித்தியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் திட்டம்:

தமிழகத்தில் 1.5 கோடி தடுப்பூசி தேவைப்படுவதாக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாளை இந்த திட்டம் செயல்படுத்த வாய்பில்லை எனவும் இதற்கு  தேவையான தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் வந்ததாக  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!