தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால்  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழக்கம் போலவே பிற்பகல் 12 மணி வரை கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

இந்த ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே எப்போதும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்து வந்தது.

இதனால் தற்போது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கின் போது மற்ற நாட்களை போலவே நண்பகல் 12 மணி வரை அரசால் அனுமதிக்கப்பட்ட கடைகள் வழக்கம் போலவே செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.