தமிழகத்தில் மே 2 ஆம் தேதி 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழகத்தில் மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி 2021 அன்று வாக்கு பதிவுகள் நடைபெற்றது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

சத்யபிரத சாகு அறிவிப்பு!

காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என அறிவித்துள்ளது.

மேலும்,

சிறிய அறையாக இருந்தால் ஒரு அறைக்கு 7 மேஜைகள் என இரு அறைகளில் வாக்கு எண்ண ஆலோசனை நடத்தப்படும். வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்.

72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு  எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!