தமிழகத்தில் NEET கட் ஆப் குறைவதால் கல்வியாளர்கள் வேதனை!

NEET தேர்வு:

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 17.78லட்சம் மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை எழுதினர்.

இதனிடையே நீட் தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் தமிழகம் இந்த ஆண்டு 28 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. அதாவது மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் நல்ல தரமான மருத்துவத்தை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் திறமையான மாணவர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு துவங்கப்பட்டது.

நீட்தேர்வு துவங்கப்பட்ட போது பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண்:

  • கட் ஆப் மதிப்பெண் 130 முதல் 150 மதிப்பெண் ஆக இருந்தது
  • இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 105 முதல் 120 மதிப்பெண்ணாக இருந்து வந்தது.

மேலும், நடப்பு கல்வியாண்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 138 மதிப்பெண் ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 117 ஆக குறைந்திருக்கிறது.

மேலும் இட ஒதுக்கீடு பிரிவிற்கான கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் 108 மதிப்பெண் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 93 மதிப்பெண்ணாக குறைந்திருக்கிறது. இதனால் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் நல்ல செல்வச்செழிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது.

இதனால் கல்வியின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வில் வெறும் 12% மதிப்பெண்ணை வைத்து எப்படி தரமான மருத்துவத்தை நோயாளிக்கு வழங்க முடியும் எனவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் மிகவும் குறைந்து இருப்பதால் தனியார் பல்கலைக்கழகங்களில் கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!