அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் – பள்ளி விடுமுறை குறித்து அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் influenza காய்ச்சலால் 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதன் காரணமாக காய்ச்சலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த காய்ச்சல் 3 நாட்களுக்குள் சரியாகி விடும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் மாணவர்களுக்கிடையே கற்றல் பாதிப்பு தான் ஏற்படும். இதையடுத்து பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து 14417 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!