இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,01,078 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா அதிதீவிரமடைந்துள்ளது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 4 லட்சத்தை தாண்டிவிட்டது. இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. மேலும் அந்தந்த மாநிலங்களிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,92,676 உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 4,187 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றியிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை  1,79,30,960 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, சிகிக்சை பெற்று பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை.

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி நிலவரம்:

நாடு முழுவதும் நேற்று வரை 16,73,46,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.