மத்திய அரசு நீட் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றம் என தகவல்!!

பாடத்திட்டம் மாற்றம்:

கடந்த ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி மத்திய அரசு அறிவித்தது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது தேர்வு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசு நீதிமன்றம் அறிவிப்பு:

மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எதிர்த்தனர். மருத்துவப் படிப்பு முழுவதும் வணிகமயமாகி விட்டதாகவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், புதிய பாடத்திட்ட மாற்றம் 2022-23ஆம் கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வரும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!