03 மாவட்டங்களில் ரேஷன் கார்டுகள் பிரிக்கும் பணிகள் தீவிரம்!!

தமிழக  அரசு உத்தரவு:

வேலுார் உள்ளிட்ட 03 மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பிரிக்கும் பணிகள் தொடங்கியது.

ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் தமிழகத்தில் 05 ஆயிரத்திற்கு மேல் உள்ளதாகவும், இதனால் விற்பனையாளர்கள்  பணிச்சுமை அதிகமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுகள் உள்ள கடைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியதால் அவற்றை பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

வேலுார் மாவட்ட அதிகாரிகள் தெறிவிப்பு:

வேலுார் மாவட்டத்தில் 698 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து, 29 ஆயிரத்து, 234 ரேஷன் கார்டுகள் உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 614 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து, 31 ஆயிரத்து, 402 ரேஷன் கார்டுகள் உள்ளன.

திருப்பத்துார் மாவட்டத்தில் 509 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து, 13 ஆயிரத்து, 692 ரேஷன் கார்டுகள் உள்ளன.

இந்த 3 மாவட்டத்தில் மொத்தம் 1,821 ரேஷன் கடைகளில் 10 லட்சத்து, 74 ஆயிரத்து, 328 ரேஷன் கார்டுகள் உள்ளன.

03 மாவட்டங்களில் எண்ணிக்கை அடிப்படையில்  ரேஷன் கார்டுகள்:

  • வேலுார் மாவட்டத்தில் 102 கார்டுகளும்,
  • திருப்பத்துாரில் 64 கார்டுகளும்,
  • ராணிப்பேட்டையில் 65 கார்டுகளும்,

என மொத்தம் 231 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.

 ரேஷன் கடைகள் வேறுயிடத்தில் தேர்வு செய்யும் பணி

எந்த ரேஷன்  கடைகளில் தலா 750 கார்டுகள் இருப்பதோ அவை  பிரித்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க வேறு இடங்களில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

  • கடைகளை மாற்றம் செய்வதற்கு முன் ரேஷன் கார்டுதாரர்களின் விருப்பம் கேட்கப்படும்.
  • ரேஷன் கார்டுகள் 500 க்கும் மேற்பட்ட இருந்தால் பகுதி நேர ரேஷன் கடையும்,
  • ரேஷன் கார்டுகள் 500 க்கும் மேல் இருந்தால் முழு நேர ரேஷன் கடையும் அமைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள   தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!