கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய நபர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்!!!

விரைவில் கடன்கள் தள்ளுபடி

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவரங்கள் சரிபார்ப்பு:

கூட்டுறவு வங்கிகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டி நகைக்கடன் பெற்ற நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

நகைக்கடன் தள்ளுபடி:

ஒருவரின் பெயரில் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போன் மூலம் தகவல்கள்:

இதற்கான சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் பெற்றவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நகைக்கடன் பெற்றதற்கான ஆவணங்களை வந்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் தெரிவிப்பு: 

நகைக்கடன் பெற்றவர்கள், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு), பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு:

நகைக்கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்களின் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!