பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!!

புதிய தேர்வு மதிப்பெண் முறை:

கலை அறிவியல் கல்லுாரிகளில் இதுவரை, அகத்தேர்வு மற்றும் பருவத்தேர்வுகளுக்கு, 25:75 என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று அகத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சில தன்னாட்சி கல்லுாரிகளில், இரண்டு தேர்வுகள் நடத்தி அதன் சராசரி அகத்தேர்வு மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்வது வழக்கம்.

நடப்பு ஆண்டில் இப்புதிய நடைமுறை, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த கல்லுாரிகளும், மாணவர்கள் வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பில் சமநிலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தினால், முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அரசு கலை கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில், எங்கள் கல்லுாரியில் அகத்தேர்வுக்கு, மினிமம் என்று கூறப்படும் கட்டாய மதிப்பெண் நிர்ணயிக்கவில்லை; இரண்டு அகத்தேர்வு மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும். பருவத்தேர்வை பொறுத்தவரையில், இளநிலை மாணவர்கள் 50க்கு குறைந்தபட்சம் 18 மதிப்பெண்கள், முதுநிலை மாணவர்கள் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெறுவர் என தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!