தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமா?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால்! தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முன்பே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்க நேரத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயமில்லை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் முழு வீச்சாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகி வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.இதனால் அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியது ஆனால் அவை அனைத்தும் பலனளிக்காத காரணத்தினால் புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தல் படி, சில தவிர்க்க முடியாத காரணங்களால் முழு ஊரடங்கு இன்று (மே 10) முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் தேவைப்படும் வாகனங்கள் 

மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து ரயில், விமானம் மூலமாக வரும் பயணிகள் மட்டும் https://eregister.tnega.org என்ற இணையதளம் மூலமாக இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு செல்லுவோர் உரிய ஆவணங்கள் காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.