தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர போகிறதா…? பொது மக்கள் அதிர்ச்சி!

மின் கட்டணம்:

மின் வாரியத்தின் கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்? மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றாலும் அதற்கு மக்கள் பொறுப்பல்ல. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல்செய்வது, பராமரிப்பதில் நிர்வாகச் சீர்கேடு போன்ற பல்வேறு அம்சங்களில் நிலவும் கேடுகெட்ட ஊழல் போன்றவையே காரணங்களாகும்.சங்கப் பிரதிநிதிகள், தனியார் மைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், வாரியத்தில் நிலவும் ஊழல்களைக் களைவது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கி மின் வாரியத்தை கடனிலிருந்து மீட்க வேண்டும்.

அதை விடுத்து, மக்கள் மீது மின் கட்டணத்தை உயர்த்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் தன் அறிவுறுத்தலை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். மேலும், மின் மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசையும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என மாநில அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பொதுமக்களும் எங்கள் சங்கத்துடன் உறுதுணையாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!