உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்வது கட்டாயமா? அரசு பதில்!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

அரசுத் தரப்பில், “மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்பது  கட்டாயமில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்பு: 

இந்த விசாரணையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கல்வி தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு வகுப்புகளிலும் 50%க்கும் குறைவான மாணவர்களையே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு:

பெற்றோர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துக் கொள்ள மாணவர்களை அனுப்பலாம். மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என தமிழக அரசு தரப்பில் இருந்து உறுதியாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!