பள்ளி மாணவர்களுக்கு சனிக் கிழமை விடுமுறை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை 90% மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். ஆனால் சனிக்கிழமை மட்டும் 25% மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்.
அதனால் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுவதால் பள்ளிக்கு வராத நாளில் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. மறுபுறம் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்றிருப்பதை 30 – 35 மாணவர்களாக அரசு அதிகரிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!