உடுமலைபேட்டையில் இன்று மின்தடையா? தயாராகுங்கள் மக்களே!!

தேவனுர்புதூர் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:

உடுமலையில் உள்ள தேவனுர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை :

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக

  • செல்லம்பாளையம்
  • காரம்பாளையம்
  • நல்லூர்
  • பொன்னன்கவுண்டனூர்
  • தொண்டமுத்தூர்

ஆகிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!