B.Arch படிப்புக்கான கலந்தாய்வில் JEE எழுதியவர்களும் பங்கேற்கலாம்: ஐகோர்ட் உத்தரவு!!

பிஆர்க் :

தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா அல்லது ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2020-21) வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், 2021-22ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனுவுக்கு விரிவாக விளக்கமளிக்கும்படி, ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டார்.

ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!