தமிழகத்தில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்றார்…

நடந்து முடிந்த தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்டோர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற கு.பிச்சாண்டிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்தார்.