Karur District Recruitment 2021 – கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு கீழ்காணும் தகுதிகளின் படி மாதம் ரூ.2000/- ஊதியத்தில் 16 காலிப்பணியிடங்களுடன் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Karur District Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பணியின் பெயர் | Bank Coordinator |
பணியிடம் | கரூர் மாவட்டம் |
காலிப்பணியிடம் | 16 |
கல்வித்தகுதி | 12th, Read Write in Tamil |
ஆரம்ப தேதி | 25/08/2021 |
கடைசி தேதி | 31/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கரூர் மாவட்டம்
பணிகள்:
Bank Coordinator பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Bank Coordinators கல்வி தகுதி:
- 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நன்றாக எழுத படிக்க மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
- கணினிதிறன் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கைபேசி வைத்திருப்பவர்களாகவும், அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும் & பெறவும் திறனுடையவர்களாகவும் இருத்தல் அவசியம்.
மாத சம்பளம்:
Bank Coordinator பணிக்கு மாதம் ரூ. 2000/- சம்பளமாக வழங்கப்படும்.
Bank Coordinators வயது வரம்பு:
Bank Coordinator பணிக்கு 31/08/2021 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் அதே தொகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
- மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட உறுப்பினராக (612 14௦) இருத்தல் வேண்டும்.
- நல்ல தகவல் தொடர்புதிறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
- நீண்ட காலகடன் நிலுவை உள்ளவராக இருத்தல்கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதியுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக 31.08.2021-க்குள் வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 25/08/2021 |
கடைசி தேதி | 31/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |