தமிழகத்தில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடைசி நாள்! என முதல்வர் தெரிவிப்பு!!

       அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு இணையதளம் மூலம் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை தனிக்குழு மூலம் கலந்து ஆலோசித்து உள்ளார்.

இணையதளத்தில் மூலமாக மாணவர் சேர்க்கை:

அதனை தொடர்ந்து கொரோனா அதிகம் பரவி வருவதால் மாணவர்களும், பெற்றோர்களும் கூடுவதை தவிர்க்க இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஏதேனும் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள்:

  • B.Sc.,
  • கணினி பொறியியல்,
  • கணிதம், இயற்பியல்,
  • விலங்கியல்,
  • B.Com.,
  • வணிகவியல்,
  • புள்ளியியல்,
  • BBA.

போன்ற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கல்லூரியின் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.