பாலிடெக்னிக் அரியர் தேர்வு எழுத அக்.21-க்குள் கட்டணம் செலுத்த கடைசி நாள்!!

பாலிடெக்னிக் கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்த கடைசி தேதி அக்டோபர் 21 என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

அரியர் தேர்வு:

இத்தகைய எழுத்துத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்து வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் விதமாக தற்போது சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையின் படி 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது. அத்தகைய தேர்விற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்துவதற்கு அக்.21ம் தேதி கடைசி என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு கட்டணம் செலுத்தத் தவறினால் அபராதம் 150 ரூபாய் சேர்த்து அக்.23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!