மாணவர்களுக்கு புத்தகப் பைகளில் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் புத்தகபைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அரசு நிதி விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி புத்தக பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதலைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட   புத்தகப் பைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!