ஊரடங்கு போது அனுமதி கிடைக்காத கடைகள் என்னென்ன? தெளிவான தகவல் உள்ளே!

ராஜீவ் ரஞ்சன் கடிதம் மூலமாக சொன்ன தகவல் :

கூடுதல் கட்டுப்பாடுகளின் படி பெரிய கடைகள் என்றால் அவற்றை எவ்வாறு வரையறுப்பது என்று தலைமை செயலாளரிடம் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டிருந்தனர். எனவே, 3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் என்று விளக்கம் அளித்த  மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் மூலமாக தெருவித்தார்

ஊரடங்கு போது அனுமதி கிடைக்காத கடைகள்:
  • ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளும் அடைக்கப்பட வேண்டும்
  • 3000 சதுர அடிக்கு மேல் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும்.
  • உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பொது, தனியார் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  •  ரயில்கள் இயக்கத்துக்கு தடை இல்லை.
  • மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகுநிலையங்கள், சலூன்கள் அடைக்கப்பட்டுள்ளது.
  • வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.