மதிய உணவு திட்டம்:
தமிழக அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை 12-ம் வகுப்பு வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த ஆலோசனை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உணவுக்கான உரிமை குறித்து நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சிந்தனை முன்வைக்கப்பட்டது.
உணவு மற்றும் சரிவிகித உணவுக்கான உரிமையை உறுதி செய்யும் கொள்ளைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உறுப்பினர் ராஜீவ் ஜெயின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
12ம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு திட்டம்:
இதன் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து கிடைக்கும். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதால், இனி வரும் கல்வியாண்டில் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.