10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “ தமிழகத்தில் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும்.

ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் மற்றும்  அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!