முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் இணையதளம் மூலம் வெளியீடு!!

2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test, Postgraduate – NEET PG 2021) முடிவுகள் வெளியாகியுள்ளன.

இணையதளத்தின் வெளியீடு:

தேர்வு முடிவுகளை மாணவர்கள் nbe.edu.in.NBE என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 260 நகரங்களில் 800 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?

மாணவர்கள் nbe.edu.in என்ற இணையதளத்திற்கு சென்று NEET PG 2021 என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய பக்கம் ஒன்று திறக்கும். அந்த பக்கத்தில் இருக்கும் NEET PG 2021 Results என்பதை கிளிக் செய்து பின்னர் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் நீட் தேர்வு முடிவுகளை பெறலாம்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!