“தேர்வுகளை துணிவோடு சந்தியுங்கள்; அச்சம் வேண்டாம்!” மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!


“தேர்வுகளை துணிவோடு சந்தியுங்கள்; அச்சம் வேண்டாம்!” மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். காணொலி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 91 வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர், சில நேரங்களில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் மத்தியில் பெற்றோரும் உறவினர்களும் பள்ளிகளும் ஏற்படுத்துவிடுவதாக குறிப்பிட்டார்.

தேர்வுகள் குறித்த நெருக்கடியை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்த கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

வாழ்க்கை என்பது நெடிய பயணம் என்றும் அதில் தேர்வு என்பது ஒரு சிறிய நிறுத்தம் மட்டுமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதில் அளித்தார்.