பள்ளி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வருகை தந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 14417 என்ற புகார் என்னையும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் அறியும்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் வெளிப்படையாக தாங்கள் முன் வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது வீடியோ பதிவு மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு இரண்டு மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!