1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பெரும்பாலானோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழக அரசு மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் விதமாக பள்ளிகளை திறப்பதில் உறுதியாக இருந்தது. அவ்வாறு பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களை வரவேற்குமாறு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உட்பட்ட சில பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அமைச்சர் மாணவர்களிடம் உரையாடியுள்ளார். பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாணவர்களுக்கு நீதிக் கதைகளை கூறியும், பாட்டு பாட வைத்தும் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!