1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாணவர்களின் மனநிலையை அறிந்த பின்னரே தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்வு:

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். எனவே நவம்பர் 1ம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பு:

தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாணவர்களின் மனநிலையை அறிந்து பின்னர் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!