அமைச்சர் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு பற்றிய தகவல்!

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. மற்ற படிப்புகளை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்பபதிவுகளும் நடைபெற தொடங்கியது. https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுகள் பங்கேற்றனர் இவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு முறை கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக 15ம் தேதி நடைபெற்றது. குறிப்பிடத்தக்கது. இந்த முதல் சுற்று கலந்தாய்வில் சுமார் 14,524 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் 10,351 பேர் கலந்து கொண்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போதைய 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 252 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 953 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கலந்தாய்வு நடைபெறும்போதே, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்தால் சேரலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை தவிர்ப்பதற்காகவே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!